டெல்லி போராட்டக்களத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு திருச்சியில் அஞ்சலி !

0
1

டெல்லி போராட்டக்களத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு திருச்சியில் அஞ்சலி !

விவசாய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் போராட்டக் களத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு திருச்சி பெரிய மிளகுபாறை அருகே நினைவேந்தல் நடைபெற்றது.

2

அஞ்சலி நிகழ்ச்சியிக்கு அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூரியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் துணைச் செயலாளர் த.இந்திரஜித் முன்னிலை வகித்தார்.

மேலும் திமுக விவசாய அணி எஸ்.டி.சே.சு. அடைக்கலம், திமுக விவசாய தொழிளர் அணி கொட்டப்பட்டு சோ.ரமேஸ், காங்கிரஸ் முரளி,மதிமுக செல்லதுரை, விசிக புல்லட் லாரன்ஸ், விசிக வட்ட செயலாளர் சிறுத்தை சதிஷ், சிபிஐ புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், ஏஐடியுசி க.சுரேஷ், நடராஜன், விவசாய தொழிலாளர் சங்கம் கனேஷன், மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் ஜெயகுமாரி, மாணவர் சங்க மாநில துணை செயலாளர் ஜி.ஆர்.தினேஷ், மாவட்ட செயலாளர் க.இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.