காவல்துறை வாகனம் மோதிய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சாவு:

0
1

காவல்துறை வாகனம் மோதிய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சாவு:

 திருச்சி மாவட்டம், செந்தண்ணீர்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மீது காவல்துறை வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி ஜீயபுரம் அருகே மேல அல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்த மலையாளன் மகன் மூக்கன் ( 61). இவர் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள இவரது நண்பர் வீட்டிற்கு சென்று அல்லூர் கிராமத்திற்கு அவரது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போலோ மருத்துவமனை அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அனுகுசாலையில் சென்று கொண்டிருந்தார் மூக்கன் . அப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் திடீரென மூக்கன் சென்று கொண்டிருந்த அனுகுசாலையின் குறுக்கே சென்றது.

2

இதில் காவல்துறை வாகனம் இருசக்கர வாகனத்தில் பலமாக மோதியதில் மூக்கன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து மூக்கன் மகன் சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மூக்கன் மனைவி செல்வி அண்மையில் உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.