அரிமா சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவர்களுக்கு covid-19Warriors பட்டம் கேடயம் !

0
Business trichy

 

அரிமா சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவர்களுக்கு covid-19Warriors பட்டம் கேடயம் !

நேற்று 19.12.2020 சனிக்கிழமை மாலை திருச்சி மன்னார்புரம் கண்ணப்பா ஹோட்டலில் திருச்சிராப்பள்ளி ராக்போர்ட் இன்ஸ்பெயர் அரிமா சங்கம் சார்பில், சங்கத்தின் சாசனத் தலைவர் அரிமா.மு.நடராஜன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரரி முதல்வர் மருத்துவர் திருமதி.வனிதா, மேற்படி கல்லூரியின் மேனாள் துணை முதல்வர் மற்றும் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் திரு.எம்.ஏ.அலீம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திரு.காமராஜ், ஆகியோருக்கு கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்தமைக்காக அவர்களை பாராட்டி “Covid-19 Warriors” என்கிற பட்டம்-கேடயம் வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

loan point

nammalvar
web designer

கூட்டத்தில் கவிஞர் நந்தலாலா மருத்துவர்களை வாழ்த்திப் பேசினார்.

மேற்படி சிறப்பு நிகழ்வில் மேற்படி அரிமா சங்கத்தின் சார்பில் திருச்சி புத்தூர் அன்னல் காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பில் இரண்டு SS Wheel Chairs மற்றும் இரண்டு SS Wheel Structures வழங்கப்பட்டது!

கூட்டத்தில் மேற்படி சங்கத்தின் திட்ட இயக்குநர்அரிமா.முனைவர். சேவை.கே.கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். சங்கத்தின் செயலாளர் அரிமா.எஸ்.முருகேசன் வரவேற்புரையும், பொருளாளர் அரிமா.பி.செல்வம் நன்றியுரையும் ஆற்றினார்கள்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.