அரியமங்கலம் அருகே பாலத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர ; எஸ்டிபிஐ கோரிக்கை !

0
Business trichy

அரியமங்கலம் அருகே பாலத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர ; எஸ்டிபிஐ கோரிக்கை !

திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கலம், மலை அடிவாரம் அஞ்சுமன் நகரில் வசிக்கும் பொதுமக்களும்,SDPI கட்சி நிர்வாகிகளும் பாலத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கலம், மலை அடிவாரம் அஞ்சுமன் நகரில் வசிக்கும் பொதுமக்கள் ஒருபுறம் தண்டவாளமும், மறுபுறம் உய்யகொண்டான் ஆறும் சூழ்ந்த நிலையில் அவசர தேவைக்கு சுமார் ஒன்றறை கிமீ தொலைவுக்கு சுற்றி வருகின்ற காரணத்தால் தங்களுக்கு ஒரு பாலம் வேண்டும். என்று நீண்ட நாட்களாகவே அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். அவசர ஊர்தியோ, காவல்துறை வாகனமோ, தீயணைப்பு துறையை சார்ந்த எந்த அத்தியாவசிய தேவைக்கும் உள்ளே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு ஒரே தீர்வு ஆற்றின் மீது பாலம் வைத்தால் தான் பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

 

Rashinee album

ஆகவே அந்தப் பாலத்தை அரசாங்கம் கட்டித்தர தாமதித்ததால் அங்கு இருக்கக்கூடிய அனைத்துதர பொதுமக்களும் ஒன்று சேர்ந்து தங்களுடைய சொந்த பொருளாதாரத்தை 25 லட்ச ரூபாய் சொந்தமாக செலவு செய்து தாங்களே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Image

இன்று SDPI கட்சி திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் கட்சியின் நிர்வாகிகளும், பொதுமக்களும் நேரில் பார்வையிட்டனர். மேலும் இது சம்மந்தமாக உயர் அதிகாரிரளிடம் மனு அளித்து இருக்கின்றார்கள்.

மேலும் இந்த பாலம் அமைப்பதில் அரசு காலதாமதப்படுத்தினால், அடுத்தகட்டமாக போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.