டிசம்பர் 17, ரைட் சகோதரர்கள் வானூர்தி முதன் முதலாகப் பறந்ததினம்

0
1

டிசம்பர் 17, ரைட் சகோதரர்கள் வானூர்தி முதன் முதலாகப் பறந்ததினம்

2

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothers, ஓர்வில் ரைட்
(ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் “ஓர்வில் ரைட்” 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட ரைட் பிளையர் எனும் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப்படுத்தப்பட்டது.

1959-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான ஐஸ்னோவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ரைட் பிரதர்ஸ் தினத்தை கெளரவப்படுத்த அமெரிக்க அஞ்சல்துறை 2003-ஆம் ஆண்டு 37-சென்ட் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.
டிசம்பர் 17, ரைட் சகோதரர்கள்  வானூர்தி முதன் முதலாகப் பறந்த தினம்
குறித்து திருச்சிராப்பள்ளி அமேசான் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் அஞ்சல்தலை சேகரிப்பாளருமான‌விஜயகுமார் எடுத்துரைத்தார்

3

Leave A Reply

Your email address will not be published.