டிசம்பர் 17 பீத்தோவன் பிறந்த நாள்:

டிசம்பர் 17 பீத்தோவன் பிறந்த நாள்
1770 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்த பீத்தோவன், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைகருவிகளை இசைப்பதில் தேர்ந்த கலைஞராக திகழ்ந்தார். இவரின் சிம்பொனி இசையில் 5 ஆவது மற்றும் 9 ஆவது பீட்கள் மிகவும் புகழ் பெற்றதாகும்.
கேட்கும் திறன் இல்லை:
ஆரம்பத்தில் எந்த குறைபாடும் இல்லாத பீத்தோவனுக்கு, தனது 26 ஆவது வயதில் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறன் குறைந்து கொண்டே போய் பின்னர் முற்றிலுமாக காது கேளாமல் போனது. இதனால், மன வருந்தியுள்ளார் பீத்தோவன்


புகழ்பெற்ற இசை:
எனினும், புகழ்பெற்ற இசைப்படைப்புகள் பெரும்பாலும் கேட்கும் திறன் குறைந்த பிறகு தான் பீத்தோவன் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

போராடி வென்ற தேசம்:
இரண்டாம் உலகப்போரின் போது சோர்ந்து கிடந்த ஐரோப்பியர்களுக்கு எழுச்சியூட்ட உலகப் புகழ்பெற்ற பிபிசி ஒலிபரப்பு நிறுவனம் பீத்தோவனின் எழுச்சியூட்டும் 5 ஆவது சிம்பொனியின் ஒரு பகுதியை தனது செய்திகளுக்கும், அறிவுப்புகளுக்கும் முன் ஒலிபரப்பியதாக கூறப்படுகிறது. இதனால், துவண்ட தேசம் நிமிர்ந்து போராடி வெற்றி பெற்றுள்ளது.
400 கையேடுகள்:
காது கேட்காமல் போனதால் தாள்களில் எழுதி உரையாடியுள்ளார் பீத்தோவன். மற்றவர்கள் சொல்ல விரும்புவதை இவரது உரையாடல் டைரியில் எழுதுவார்கள். அதற்கு இவர் சைகை அல்லது எழுத்து மூலம் பதிலளிப்பார். அவ்வாறு 400 கையேடுகளை பீத்தோவன் வைத்திருந்திருக்கிறார்.
தனது 57 ஆவது வயதில், பீத்தோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.பீத்தோவனின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தில் உலகம் போற்றும் இசை கோர்வைகள் நூற்றாண்டுகளை கடந்தும் நினைக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்திய அஞ்சல் துறையினர் 20 பைசா மதிப்பில்
பீத்தோவனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது
வரலாற்றில் டிசம்பர் 17 பீத்தோவன் பிறந்த நாள் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் அஞ்சல்தலை சேகரிப்பாளருமான விஜயகுமார் எடுத்துரைத்தார்
