திருச்சியில் 99 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்:

0

திருச்சியில் 99 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்:

திருச்சி மாநகராட்சி சு.சிவசுப்பிரமணியன் அவர்களின்  உத்தரவின்பேரில், கருமண்டபம், தென்னூர், புத்தூர், தில்லை நகர், உறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்யப்பட்ட 99 கடைகளில் இன்று (14.12.2020) நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 18 கடைகளில் இருந்த 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை உதவி ஆணையர் வினோத் அவர்கள் தலைமையில் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள், அதிரடி நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து கடைகளுக்கு ரூ.6,600 அபதாரம் விதிக்கப்பட்டடது.

 

Leave A Reply

Your email address will not be published.