மின் சிக்கனத்தை கடைப்பிடிக்க பெருநகர மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தல்:

0
1

மின் சிக்கனத்தை கடைப்பிடிக்க பெருநகர மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தல்:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14ந்தேதி முதல் 20ந்தேதி வரை மின் சிக்கன வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.  அதன்படி இத்தாண்டு இன்று திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது.  மேலும்,  திருச்சி பெருநகர் பகுதிகளில் மின் சிக்கனத்திற்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

2

இதுகுறித்து திருச்சி மின்பகிர்மான வட்டம் பெருநகர மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

திருச்சியில் புதுப்புது திட்டங்கள், புதிய மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள், விவசாயம்  என இத்தாண்டு 1,16,800 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தின் தேவை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதமாக அதிகரிக்கிறது. எனவே, மின்நுகர்வோர் ஒவ்வொருவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.