வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்:

0
1

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சரிபார்க்க வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

Helios

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 21-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனை மையமாக வைத்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படும். 2020 ஆண்டு நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியினை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது.

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இப் பணி நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் டிசம்பர் 12 சனிக்கிழமை ,13 ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் நடைபெற்றது.

2

முகாம்களில் பொது மக்கள் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்று சரிபார்த்தனர்.21 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தனர்

மேலும் இரண்டு இடங்களில் பெயர் இருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கும் பணிகள் இந்த முகாம்கள் வழியாக செய்யப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்

3

Leave A Reply

Your email address will not be published.