மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு:

0
1

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு:

திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மையினா் மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில்(NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கடைசி நாள் 30.11.2020 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 31.12.2020 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் மாணவ,மாணவிகளுக்கு தற்போது முந்தைய வகுப்பில் மதிப்பெண் 50% பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என அரசு அறிவித்துள்ளது.

2

பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மட்டுமே மாணவ,மாணவியர் பயின்று வரும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி சிறுபான்மையின மாணவ,மாணவிகள் தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவா்கள் தொிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.