முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது:

0
Business trichy

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது:

திருச்சி,மண்ணச்சநல்லூர், எதுமலை கிராமத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை புதியதாக வழங்குவதற்காக NGO  மூலம் தன்னை நியமனம் செய்துள்ளதாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சோ்ந்த கோபால் மகன் தினேஷ்(25) என்பவர் நபா் ஒருவருக்கு ரூபாய் 100 வீதம் சுமார் 600 நபர்களிடம் வசூல் செய்துள்ளார்.

Rashinee album

இம்மோசடி எதுமலை கிராம சமுதாய சேவை மைய கட்டிடத்தில் கடந்த 02.12.2020 முதல் நடைபெற்று வந்துள்ளது. இது தொடா்பாக சந்தேகம் அடைந்த கிராம பொதுமக்கள் சுமார் 350 நபர்கள் (ஆண்கள் 300 மற்றும் பெண்கள் 50) 07.12.2020 அன்று இரவு 7.00 மணியளவில் சமுதாய சேவை மைய கட்டிடத்தில் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

Image

இது தொடர்பாக மண்ணச்சநல்லூர், வருவாய் வட்டாட்சியார் சிறுகனூர் காவல் ஆய்வாளர்  மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரனை மேற்கொண்டதில், மேற்படி மோசடி நபர் எதுமலை கிராம ஊராட்சி மன்ற தலைவரிடம் தவறான தகவல் அளித்து கிராம பொதுமக்களிடம்ரூபாய் 100 பண வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேற்படி நபர்டமிருந்து திரும்ப பெற்று மோசடியாக வசூல் செய்த பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேற்படி மோசடியில் ஈடுபட்ட நபர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடமிருந்து லேப்டாப், பிரிண்டர் மற்றும் லேமினேசன் மிஷன் ஆகியவை காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.