அங்கன்வாடியை கண்டுகொள்ளாத திருச்சி மாநகராட்சி:

0

அங்கன்வாடியை கண்டுகொள்ளாத திருச்சி மாநகராட்சி:

திருவெறும்பூர் நேதாஜி நகர் அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதி கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை திருவெறும்பூர் டிச 9 திருவெறும்பூர்
65-ம் வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக பொது கழிப்பிடம் உள்ளது. இந்த மையத்திற்கு செல்ல சரியான சாலை வசதியும் இல்லை,அத்துடன் குடிக்க தண்ணீர் வசதியும் அங்கு கிடையாது. கட்டப்பட்டுள்ள கழிவறைகளுக்கும் தண்ணீர் வசதி இல்லை. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் லெனின் கூறுகையில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்கப்பட்டது.

முதல் திருச்சி மாநகராட்சி இதை கண்டுகொள்வது இல்லை. தற்பொழுது மழை பெய்துள்ளதால் சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் கொரோனா காலமாகவுள்ளதால் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வருவதில்லை. என்பது சிறு ஆறுதல் ஆனால் இங்கு அடிக்கடி பாம்புகளும், பன்றிகளும் சுற்றி வருகின்றன. தடுப்பூசி முகாம்கள், ஊட்டசத்து உணவுகள் பெற்றிட செல்லும் பயனாளிகள் மிகுந்த பாதிப்புள்ளாகும் சூழல் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மதுபான பாராகவும் பயன்படுத்தப்படுவது மிக பெரும் துயரம்.

எனவே திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலை,குடிநீர்,சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து சுற்று சுவர் அமைத்து கொடுக்க வேண்டும். இது இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும் இதனை ஏற்று உடனடியாக தீர்வு காண வேண்டும் இல்லையேல் மக்களை திரட்டி திருச்சி மாநகராட்சியை கண்டித்து போராட்டம் செய்வோம் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.