திருச்சியில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்:

திருச்சியில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்:
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தகுதியள்ள பழங்குடியினர்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணியமர்த்திட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 10,000-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய் 9,000-ம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 8,000 என்ற விகிதங்களில், கல்வியாண்டு முடியும் வரை அல்லது காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை, மாத ஊதியம் வழங்கப்படும்.


இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, வகுப்பு நடத்துதல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வுச் செய்யப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
வ.எண் | பணியிட விவரம் | காலிப்பணியிடம் | குறைந்தப்பட்ச கல்வித்தகுதி |
1. | முதுகலை பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) | 1 |
M.Sc., B.Ed., |
2. | முதுகலை பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்) |
1
|
M.Sc., B.Ed., |
3. | பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) | 1
|
B.A., B.Ed., |
4. | பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) | 1 | B.Sc., B.Ed., |
5. | பட்டதாரி ஆசிரியர்
(சமூக அறிவியல்) |
1
|
B.A., B.Ed., |
6. | இடைநிலை ஆசிரியர் | 1 | D.TEd., |
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருச்சி, துறையூர், பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தினை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 24.12.2020 பிற்பகல் 5.00 மணிக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்திற்கு கிடைக்கும்படி அனுப்பிட வேண்டும்.
