உண்மைக் கதை பாகம் 7 ; போன்  செய்ய சென்ற இடத்தில் மலர்ந்த காதல் !

0
1

உண்மைக் கதை பாகம் 7 ; போன்  செய்ய சென்ற இடத்தில் மலர்ந்த காதல் !

உண்மைக் கதையை பதிவு செய்யும் எங்களுடைய பயணம் இந்த வாரமும் தொடர்கிறது.

உண்மை நிகழ்வை பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. அதை பதிவு செய்ய காரணம் வாழ்க்கையின் இன்பம், துன்பம் என எல்லா நிலைகளையும் கடந்து பயணிப்பது எப்படி, பொறுமையைக் கையாண்டால் வெற்றியை எப்படி அடைய முடியும் என்பதை விளக்கவே உண்மைக்கதையை பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணினோம். இதுவே ஒரு வெற்றியாளரின் வாழ்க்கையை பதிவு செய்ய காரணம் !

2

இந்த கதையின் கதாநாயகன் வாழ்க்கையில் எத்தனை துன்பங்களை அனுபவித்தார் என்பதை கடந்த பாகங்களில் பார்த்தோம். தொடர்ச்சி ; தேசிய விருதை வென்ற பிறகு ஒரு தமிழ் வாரப் பத்திரிக்கையின் செய்தியாளர் திருவேங்கிமலை சரவணனுக்கு, ராஜூ சார் மூலமாக தகவல் செல்ல. தமிழ் வாரப் பத்திரிகையின் செய்தியாளர் திருவேங்கிமலை சரவணன் என்னைப் பார்க்க பள்ளிக்கு வருகிறார். பள்ளியின் தலைமையாசிரியர் என்னை அழைத்து அவருடன் பேசச் சொல்கிறார். நான் அவரிடம் விளக்கங்களை சொல்ல, அவர் இந்த இடத்தில் வேண்டாம். மைதானத்திற்கு வாருங்கள் என்று மைதானத்திற்கு அழைத்து சென்று என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டு அனைத்து தகவல்களையும் சேகரித்து தமிழ் வார இதழில் செய்தியாக வெளியிடுகிறார்.
செய்தியை பார்த்து பலரும் எனக்கும், என் பள்ளிக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணமிருந்தனர். இதை என் தலைமையாசிரியர் என்னிடம் கூறி சந்தோசம் கொண்டார். மேலும் நான் படித்த பள்ளி தொடங்கி அந்த வருடத்துடன் 70 வருடம் ஆகிறது. முதல் முறையாக தேசிய விருது, தங்கப்பதக்கம் வென்றது நான் என்பதால் பள்ளி எனக்கு பெரும் அளவில் உதவி செய்தது.

இந்த நிலையில் தமிழ் வார இதழில் வெளியான செய்தியை பார்த்து ரயில்வே துறையின் சீனியர் மெடிக்கல் ஆபிசராக உள்ள கிருஷ்ணபிரியா அவர்கள் எனக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அந்த கடிதத்தில் கவலைப்படாத தம்பி உனக்கு உறவுகளாக நாங்கள் இருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் மேலும் 500 ரூபாய் பணமும் இணைக்கப்பட்டு இருந்தது. அது எனக்கு ஒரு பெரிய உத்வேகத்தை கொடுத்தது.

மேலும் சதன் ரயில்வே ஜி. எம் ஆனந்த் அவர்களுடைய மனைவி தமிழ் வார இதழில் என்னைப் பற்றிய செய்தியை படித்துவிட்டு என்னை அழைத்து எனக்கு உத்வேகத்தை கொடுத்தார். மேலும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயில்வே பணிக்கு என்னை பரிந்துரை செய்கிறார்கள். இதனடிப்படையில் ஒலிம்பியன் பாஸ்கரன், ஸ்போர்ட்ஸ் ஆபீஸர் என்னை மருத்துவ ஆய்வு செய்து. அனைத்து ஆவணங்களையும் பெற்று சரிபார்த்து ரயில்வே துறையில் பணி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். மேலும் எனக்கு ரயில்வே ஜி.எம் அறிவுரைகளை வழங்கி, ரயில்வே பணியைப் பற்றிய விவரங்களை எல்லாம் கற்றுக் கொடுக்கிறார். தேர்வுக்கும் என்னை தயார்படுத்தினார்.

 

இந்நிலையில் ‘குரூப் சி’ வழியாக ரயில்வே பணியில் சேர்கிறேன். பசியோடு வாழ்ந்த நான். உறவுகள் இன்றி தவித்த நான். தேவைகளை பூர்த்தி செய்ய பிறரை நாடி இருந்த நான். ஒரு மாற்றத்தை உணர தொடங்கினேன். இந்த சமூகம் எண்ணை மதிக்க தொடங்கியது. ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் மாரி மாறியது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக ஜூன் 14.2004 பணியில் சேர்ந்தேன். முதல் முறையாக கோட்,டை, எல்லாம் அணிந்து பணிக்கு சென்றேன்.
ஒரு மாதம் கழித்து எனக்கு வேலை கிடைத்ததைப் பதிவுசெய்ய அதே தமிழ் வார இதழிலின் பத்திரிக்கையாளர் சரவணன் வருகிறார். என்னைப் பார்த்து மீண்டும் செய்திகளை சேகரித்து. வேலை கிடைத்ததை செய்தியாக வெளியிடுகிறார். அந்த ஒவ்வொரு நினைவுகளும் அழகான காட்சியாக கண்ணில் என்றும் தெரிகிறது.

 

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் பயிற்சிக்காக திருச்சி ரயில்வே பயிற்சி மையத்திற்கு வருகிறேன். அங்கு பயிற்சியை மேற்கொள்ளும் போது பல்வேறு புது நண்பர்கள் கிடைக்கின்றனர்.
எனக்கு கார்டினாக உள்ள விவேகானந்தா யூத் ஹாஸ்டலின் முத்து சரவணன் சாருக்கு போன் செய்ய ரயில்வே பயிற்சி மையத்திற்கு அருகே உள்ள சுமங்கலி சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்வேன். அங்கு வைக்கப்பட்டிருக்கும் தொலைபேசியின் வழியாக தினமும் சாருடன் பேசி வந்தேன். அப்பொழுது சுமங்கலி சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பெண் பணியாளர்கள் நல்ல நண்பர்களாக மாறினர். அவர் என்னோடு நன்கு பேசுவார். இந்த நிலையில்தான் அவரை எனக்கு பிடித்துப் போனது. அந்தப் பெண்ணிடம் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்ற கருத்தை வெளிப்படுத்தினேன். என்னிடம் இதைப் பற்றி பேச ஒன்றும் இல்லை. என் பெற்றோர்கள் தான் இது சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்று கூறி சென்றுவிட்டார்.

அந்த சமயத்தில் என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். நான் அவர்களிடம் திருச்சி பயிற்சி மையத்திற்கு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றும் பெண் ஒருவரை விரும்புகிறேன் என்று கூறினேன். அவர்கள் சந்தோஷத்தில் நான் அவர்கள் பெற்றோரிடம் பேசுகிறேன் என்று கூறினார்கள். அந்த சமயத்தில் தான் சரியாக பயிற்சியும் முடிந்தது.. அதனால் சென்னை செல்ல நேரிட்டது. சென்னையில் பணியாற்றும் பொழுது லீவுக்கு திருச்சிக்கு வந்து விடுவேன். அப்படி ஒரு முறை திருச்சிக்கு வரும் பொழுது நேரடியாக இந்தப் பெண் வீட்டிற்குச் சென்று அவரின் பெற்றோரிடம் பேசினேன்.
அவரின் பெற்றோர்கள் விசாரித்து முடிவு எடுப்பதாக கூறி அனுப்பிவிட்டனர். பிறகு விடுமுறையை எதிர்பார்த்து காத்திருப்பேன். அப்படி விடுமுறை கிடைக்கும்போது எல்லாம் திருச்சிக்கு வந்து விடுவேன். இப்படி வரும் போது ஒரு முறை அவர்கள் வீட்டுக்குச் சென்று மீண்டும் அவர்கள் பெற்றோரிடம் பேசினேன். அவர்கள் பெற்றோர்களும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். பிறகு வாரத்திற்கு ஒரு முறை அவளிடம் தொலைபேசி வழியாக பேசுவேன். ஒரு பக்கம் ரயில்வே பணி, மறுபக்கம் குடும்ப வாழ்க்கைக்கான தொடக்கம் என்று என்னுடைய வாழ்க்கைப் பயணம் சென்று கொண்டிருந்தது.

மேலும் எனக்கு ஒரு ஆசை, நாங்கள் இருவரும் எங்கேனும் வெளியே செல்ல வேண்டும் என்று. அவர் பெற்றோரிடம் கூறி, நானும் அவளும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சென்றோம். உடன் என் சகலையும் அவருடைய மகனும் வந்தார்கள்.நாங்கள் நால்வரும் தஞ்சாவூர் பெரிய கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டு, மாலை இரயில் வழியாக வீடு திரும்பினோம். அப்பொழுதுதான் அவரைப் பற்றி நானும், என்னைப் பற்றி அவரும் முழுமையாக அறிந்து கொண்டோம்.

அப்போது தான் நான் முழுமையாக உணர்ந்தேன், இவர்கள் தான் நமக்கு சரியானவர்கள் என்று. மூன்று வருடம் கடந்தது. என்னுடைய சார்பில் என்னுடைய ஆசிரியர்களும் அவர்களுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு பேசி முடிவு செய்தனர். இப்படியாக எங்களுக்கு திருமணமும் நடைபெற்று முடிந்தது. என்னுடைய குடும்ப வாழ்க்கை தொடங்கியது.வாழ்க்கையை பற்றிய முழுமையான தெளிவும் ஒவ்வொரு அனுபவம் மூலமாக கிடைத்தது. ஒவ்வொரு அனுபவங்களும் என்னை வாழ்க்கைக்கு பக்குவப்படுத்தியது, தயார் படுத்தியது. ரயில்வேயில் மேலும் பணி உயர்வு பெற்று சென்றேன்.

மேலும் எனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.  என் பெற்றோருடைய அருமை எனக்கு புரிய ஆரம்பித்தது. சிறுவயதில் என் பெற்றோரை விட்டு தனித்து வந்ததை தவறு என்று எண்ணி என் பெற்றோரை தேடிச் செல்கிறேன். ஒருவழியாக என் தாயையும்,பாட்டியையும் என்னுடைய மாமாவையும் அடையாளம் கண்டு அவர்களோடு இணைந்தேன்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை வாழ்க்கை எனக்கு அனுபவங்கள் வழியாக கற்றுக் கொடுத்தது. ஆனால் அதற்கு சற்று காலதாமதம் ஆகும். அதுவும் நம் பொறுமையை சோதிப்பதற்காகன நேரம் தான்.இந்த நேரத்தில் நம்முடைய செயல்பாடுகள் எவ்வாறு அமைகிறது என்பதைப் பொறுத்தே வாழ்வு வெற்றியை நோக்கி செல்லுமா அல்லது தோல்வியை நோக்கி சொல்லுமா என்று தீர்மானிக்கப்படுகிறது.

என் வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு துன்பங்களையும் பொறுமையாக எதிர் கொண்டதன் அடிப்படையில் ஒரு இன்பமான வாழ்வு என்னை பற்றிக்கொண்டது.
எனக்கு முதலில் மகன் திருச்சி அரசு பொது மருத்துவமனைனை பிறந்தான். அவன் பிறக்கும் பொழுது நான் ரயில்வே துறை சார்ந்த விளையாட்டு பயிற்சியில் இருந்தேன். பிறகு எனக்கு மகள் பிறந்தாள் அவளும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில்  பிறந்தார். இவ்வாறு ஒரு தந்தையாக என்னுடைய வாழ்க்கை தொடங்கியது. அனைத்தையுமே தொடக்கமாக மட்டுமே எண்ணியதால் வெற்றியை என்னால் அடைய முடிந்தது.

நான் யார் என்ற விவரம் அடுத்த வாரம்..!

– தொடரும்

3

Leave A Reply

Your email address will not be published.