சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு போர்வை வழங்கல்:

0

சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு போர்வை வழங்கல்:

காங்கிரஸ் பேரியக்க தலைவர்  சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினரும் ஓபிசி திருச்சி மாவட்ட தலைவருமாகிய எல்.ரெக்ஸ் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் பென்னட் அந்தோணிராஜ் அவர்கள், சிங்காரத்தோப்பு ஹோலி கிராஸ் காலேஜ் அருகில் உள்ள ஆதரவற்றோர் குடியிருப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர்களுக்கு குளிருக்கு இதமாக போர்வைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.பி. பகதூர்ஷா, மாவட்ட துணைத் தலைவர் ஷீலா செலஸ், இணை செயலாளர்கள் மணிகண்டன், நூர் அஹமத், கிதியோன், வார்டு தலைவர் வினோத், ஈசாக், பீரான் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.