மணிகண்டம் பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு:

மணிகண்டம் பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு:
திருச்சி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், ந.குட்டப்பட்டு, கே.கள்ளிக்குடி, புங்கனூர், அதவத்தூர், அல்லித்துறை, சோமரசம்பேட்டை, அளுந்தூர், சேதுராப்பட்டி,நாகமங்கலம்,மாத்தூர், அம்மாப்பேட்டை ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் சாலைப்பணிகள், மரக்கன்றுகள் நடுதல், ஜல் ஜுவன் மி~ன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி, போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேற்று (8.12.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அளுந்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 3.75 இலட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணன் குளத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு இடையில் நீர்தேக்க உறிஞ்சி குழி அமைக்கும் பணி, சேதுராப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 6.20 இலட்சம் மதிப்பீட்டில் அணுகுசாலை அமைக்கும் பணி, நாகமங்கலம் ஊராட்சி வெள்ளைகுளம் வரத்துவாரியில் ரூபாய் 9.51 இலட்சம் மதிப்பில் கான்கிரீட் தடுப்பு அணை கட்டப் பட்டுள்ளதையும், நாகமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 14.78 இலட்சம் மதிப்பில் சின்னக்குளம் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும். மாத்தூர் ஊராட்சி கோமங்கலம் சாலையில் ரூபாய் 33.07 மதிப்பில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளதையும். அம்மாப்பேட்டை ஊராட்சி, பூலாங்குளத்துப்பட்டியில் ரூபாய் 9.08 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ந.குட்டப்பட்டு ஊராட்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 10 இலட்சம் மதிப்பில் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டும்பணி நடைபெற்று வருவதையும்,கே.கள்ளிக்குடி ஊராட்சியில் ரூபாய் 6.10 இலட்சம் மதிப்பில் நாடகமேடை அமைக்கப் பட்டுள்ளதையும், கே.கள்ளிக்குடிஊராட்சியில் ஜல் ஜூவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.26 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருவதையும், புங்கனூர் ஊராட்சியில் ரூபாய் 17.64 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும், அதவத்தூர் ஊராட்சி, சக்தி நகரில் ஜல் ஜூவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூபாய் 25.70 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருவதையும், அல்லித்துறை ஊராட்சியில் ரூபாய் 21.55 இலட்சம் மதிப்பில் மைக்ரோ உரம் தயாரிப்பு மையம் அமைக்கப் பட்டுள்ளதையும், சோமரசம்பேட்டை ஊராட்சியில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 15.47 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இப்பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். ஆய்வின் போது மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதலெட்சுமி,.சரவணன்,உதவி செயற்பொறியாளர் திருமதி.லதா மற்றும் பலர் உடனிருந்தனர்.
