திருச்சியில் விவசாய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து கட்சியினர் மறியல்.

திருச்சியில் விவசாய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து கட்சியினர் மறியல்.
திருச்சியில் விவசாய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து சார்பில் கட்சியினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மறியல்.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மக்கள் அதிகாரம் பேன்ற கட்சிகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கைது.

இதில் திமுகவின் வைரமணி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திரஜித், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீதர்,ராஜா, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஜவகர், மக்கள் அதிகாரம் செழியன் மற்றும் பாடகர் கோவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.
திருவரம்பூர், ஸ்ரீரங்கம், போன்ற பகுதிகளிலும் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
