திருச்சியில் உலக மண் தினம் கொண்டாட்டம் !

திருச்சியில் உலக மண் தினம் கொண்டாட்டம் !
உலக மண் தினத்தை முன்னிட்டு அஸ்சிஸ்ட் நிறுவனம் சார்பில் K. கள்ளிக்குடி மற்றும் நாகமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் , மணிகண்டம் மற்றும் காந்தி நகர் வாழ் மக்களுக்கு விதைகள், மரக்கன்றுகள் மற்றும் செடி பைகள் வழங்கப்பட்டது.


மேலும் காந்திநகர் பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பசுமை தங்கசாமி – இயற்கை விவசாயி, லெனின் – இயற்கை விவசாயி, பட்டுகோட்டை, அருட்சகோதரி அமல்நாதன் மேரி மார்கரேட் – சலேசிய மாநில தலைவி, K.S. சுந்தரம். K.கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர், வெள்ளை சாமி – நாக மங்கலம் ஊராட்சி தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்விற்கு அஸ்சிஸ்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஆரோக்கிய மேரி செல்வி முன்னிலை வகித்தார்.
