திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி செயலாளருக்கு 5 ஆண்டு சிறை:

0
1

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : பள்ளி செயலாளருக்கு 5 ஆண்டு சிறை:

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள காயிதே மில்லத் தொடக்கப்பள்ளியில்  செயலாளராக ஹைதர் நகரை சேர்ந்த முகமது சலீம் (57)‌  என்பவர் இருந்து வருகிறார். கடந்த 5.9.2019 அன்று நடந்த  பள்ளி விழாவில், அதே பள்ளியை சேர்ந்த  இரண்டாம் வகுப்பு படிக்கும்  7 வயது சிறுமிக்கு  முகமது சலீம்  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் நடப்பதே வேறு என்று அச்சிறுமியை முகமது அலி மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக அச்சிறுமி தனது தாயாரிடம் ‌ கூறியுள்ளார். சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது சலீமை கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை  திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் கோர்ட்டில்  நீதிபதி வனிதா முன்னிலையில் நேற்று நடந்தது.  இறுதி விசாரணை முடிக்கப்பட்டு பள்ளி செயலாளர் முகமது சலீமுக்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.