திருச்சியில் மோசடி வழக்கில் விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி கைது:

0
Business trichy

திருச்சியில் மோசடி வழக்கில் விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி கைது:

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் (எ) ஆர்.கே.ராஜா விஜய் ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த இவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் சமீபத்தில் தொடங்கிய அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராகவும் இருந்தார்.

web designer

இவர் குறைந்த விலையில் வீட்டுமனை வாங்கி தருவதாகவும் அதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் என 60 மாதம் தவணை முறையில் பணம் செலுத்தினால் தவணை முடிந்த உடன் வீட்டுமனை வழங்கப்படும் என விளம்பரம் செய்திருந்தார். இதனை நம்பிய  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதத் தவணையை செலுத்தி உள்ளனர்.  ஆனால் மாதத்தவணை முடிந்தும் பொதுமக்கள் யாருக்கும் வீட்டுமனை வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இவர் பொதுமக்களிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்துள்ளார்.

loan point

ஏமாற்றப்பட்டவர்கள் ராஜாவை சந்தித்து கேட்டபோது அவர்களை மிரட்டி உள்ளார். கடந்த மாதம் பாதிக்கப்பட்ட  ஒருவர் போலீசில் புகார் அளித்தார். புகாரையடுத்து கமிஷனர் லோகநாதன் ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கடந்த 15 நாட்களுக்கு முன் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் புகார் குறித்து விசாரிக்க இருந்த நிலையில் தீடீர் தலைமறைவானார். இந்நிலையில் தனிப்படை போலீசார் சென்னையில் தலைமறைவாக இருந்த ராசாவை நேற்று கைது செய்து திருச்சி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.