திருச்சியில் 118 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு :

திருச்சியில் 118 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு :

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்றுனர்களாக 20 ஆண்டுகளாக பணிபுரிந்த ஆசிரியர்களின் பணி சேவையை அங்கீகரித்து காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் நேற்று முன்தினம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்து பாதயாத்திரையாக சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.
பாதயாத்திரை செல்ல புறப்பட்ட 100க்கும் மேற்பட்டோரை கன்டோன்மென்ட் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர். பாதயாத்திரை செல்ல முயன்ற 118 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
