கே‌.என்.நேருவை எதிர்த்து, அதிமுக களமிறக்க உள்ள வேட்பாளர்..?

0
1

கே‌.என்.நேருவை எதிர்த்து, அதிமுக களமிறக்க உள்ள வேட்பாளர்..?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்றபொதுத் தேர்தல் இது என்பதால் அதிமுகவினர் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது. மேலும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கும் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தி வருகிறது. வெற்றி பெறும் தொகுதிகளை குறிவைத்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தேர்தலை சந்திக்க அதிமுக திட்டமிட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் திருச்சி மேற்குத் தொகுதியை அதிமுக முனைப்புக் காட்டுகிறது. இந்த தொகுதி திமுக முதன்மைச் செயலாளராக இருக்கக்கூடிய கே என் நேரு போட்டியிடும் தொகுதி என்பதால் இந்த தொகுதியை எப்படியேனும் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறது அதிமுக.

2

இதன் காரணமாக திருச்சி அதிமுக மேற்குத் தொகுதியில் அதிகம் கவனம் செலுத்துகிறது. மேலும் மருத்துவர் செந்தில்குமார் பாரம்பரிய திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அண்ணாவின் நெருங்கிய நண்பரான திருச்சியின் மூத்த அமைச்சர் நல்லுச்சாமியின் மகன். நல்லுசாமி முன்னாள் அமைச்சராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர்  நல்லுசாமி தனது மகன் செந்தில்குமாருக்கு சீட்டு கேட்டு பல முனைகளில் முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மேற்குத் தொகுதியில் மருத்துவர் செந்தில்குமாரை களமிறக்க அதிமுக முக்கிய புள்ளிகள் முயற்சித்து வருகிறார்கள். தற்போது மருத்துவர் செந்தில்குமாருக்கு திருச்சி மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் செந்தில்குமாருக்கு சீட்டு வாங்கி தர அதிமுகவின் டெல்டா பகுதியின் முக்கிய நிர்வாகிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

– மெய்யறிவன்

 

3

Leave A Reply

Your email address will not be published.