பிறப்பு சான்றிழில் பெயர் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு:

0
1

பிறப்பு சான்றிழில் பெயர் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு:

பிறப்பு பதிவு என்பது குழந்தையின் முதல் உரிமையாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் வழங்கப்படும் சான்றிதழே குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சியாகவும் உள்ளது. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பைப் பதிவு செய்து இலவச சான்றிதழ் வழங்கப்படுகிறது. குழந்தை பிறப்பானது அதன் பெயரின்றிப் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஓராண்டுக்குள் குழந்தையின் பெயர் அல்லது காப்பாளர் மூலம் குழந்தையின் பெயரை சான்றிதழில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பெயர் பதிவு செய்யத் தவறியவர்களுக்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1.1.2000 ஆம் ஆண்டுக்கு முன்பிறந்த குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்ய 31.12.2014 வரையிலும், இந்த அவகாசம் முடிந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு 2019 வரையிலும் அளிக்கப்பட்டது.  எனினும், வெளிநாடுகளில் வசிப்போர் சான்றிதழ் பெறாமல் உள்ளதால் 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்துப் பிறப்புகளுக்கும் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டு காலம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

2

இதைப் பயன்படுத்தி, திருச்சி மாவட்ட மக்கள் பதிவு செய்யாத தங்களது குழந்தைகளின் பெயரை பதிவு செய்யலாம்.  இத்தகவலை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.