திருச்சியில் பைக் திருடன் கைது:

திருச்சியில் பைக் திருடன் கைது:

திருச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் வாகன திருட்டை தடுப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (3.12.2020) இரவு சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாநிலை அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் வகையில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மலர்மன்னன் (58), அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருச்சி மதுரை ரோட்டில் ஜீவா நகரில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இவர் ஏற்கனவே 10 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பதை தெரியவந்தது. இதையடுத்து மலர்மன்னனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.7இலட்சம் மதிப்பிலான 10 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
