நண்பா சாரிட்டபிள் டிரஸ்ட், நோ ஃபுட் வேஸ்ட் திருச்சி அமைப்பு சார்பில் உணவு வழங்கல்

0
Business trichy

நண்பா சாரிட்டபிள் டிரஸ்ட், நோ ஃபுட் வேஸ்ட் திருச்சி அமைப்பு சார்பில் உணவு வழங்கல்

புரவிப்புயல் தாக்கத்தினால் திருச்சிராப்பள்ளியில் தொடர் கனமழைஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோருக்கு நண்பா சாரிட்டபிள் டிரஸ்ட், நோ ஃபுட் வேஸ்ட் திருச்சி அமைப்பு சார்பில் உணவு வழங்கல்

web designer

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததை அடுத்து அதற்கு புரெவி எனப் பெயரிடப்பட்டது. புரவி புயல் தாக்கத்தினால் தென் தமிழகத்தில்
கனமானது முதல் மிக கனமானது வரை மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்தது.

loan point

புரவிப்புயல் தாக்கத்தினால் திருச்சிராப்பள்ளியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மண்ட், புத்தூர், மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில், தேவாலயங்கள், அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஆதரவற்றோர், மனநிலை பாதித்தவர்களுக்கு வாகனங்களில் உணவுகள் எடுத்துச் சென்று ஒவ்வொரு இடத்திலும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு நண்பா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் நோ ஃபுட் வேஸ்ட் திருச்சி இணைந்து வழங்கியது. திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன், சமூக ஆர்வலர்கள் பாபு, சந்திரன், யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோரால் உணவு வழங்கப்பட்டது

IAS academy

Leave A Reply

Your email address will not be published.