திருச்சியில் கேடயம் திட்டம் குறித்த விழிப்புணர்வு டிஐஜி துவக்கி வைத்தார்:

திருச்சியில் கேடயம் திட்டம் குறித்த விழிப்புணர்வு டிஐஜி துவக்கி வைத்தார்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பெண்கள் ஆணையம், திருச்சி சரக காவல்துறை, பாரதிதாரசன் பல்கலைக்கழகம் மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாப்பு என்ற நிகழ்ச்சியை நேற்று (2.12.2020) நடத்தியது. இந்த நிகழ்ச்சியை சரக டிஐஜி ஆனி விஜயா துவங்கி வைத்து உரையாற்றினார்.

இதில் கேடயம் திட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும், குடும்ப வன்முறை, வரதட்சணை, பணியிடத்தில் பெண்களுக்கான பாலியல் தொல்லை, குழந்தைத் திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழி்ப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் போன்ற பணிகளில் இத்திட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று கூறினார். கேடயம் திட்டம் மூலம் பொது மக்கள் பயன்பெற 93845-01999, 63830-71800 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தொடர்ந்து, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கு தையல் மிஷின், கால்நடைகளும் வழங்கினார்.
