ஆலயம் அறிவோம்

ஆலயம் அறிவோம்
கல்படி கல்யாணராமன் ஆலயம்
ஸ்ரீராமன் சீதையின் கைப்பிடித்தத் திருத்தலம்!

சீதா தேவி, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் ராமன் கருவறையில் காட்சிதரும் தலங்கள் தமிழகத்தில் அரிதாகவே உள்ளன. அப்படி அரிதான ஒரு தலம்தான் கல்படி ஸ்ரீகல்யாண ராமன் திருக்கோயில்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ளது கல்படி எனும் இந்தத் தலம்.“இலங்கையில் ராவணனை வீழ்த்தியபிறகு, சீதையின் தூய்மையை – புனிதத்தை உலகுக்குப் பறைசாற்ற முடிவுசெய்தார் ஸ்ரீராமன்.

அதற்காக ஏற்படுத்தப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கினார் சீதாதேவி. அவ்வாறு அக்னியில் இறங்கி தங்கமாக ஜொலித்த சீதையின் கையைப் பிடித்து குண்டத்தில் இருந்து கரையேற்றினார் ஸ்ரீராமன்.
இங்ஙனம் ஸ்ரீராமன் சீதாதேவியின் கையைப் பிடித்த தலம் என்பதால் `கைப்பிடி’ என இந்தத் தலத்திற்குப் பெயர் வந்தது. அதுவே நாளடைவில் `கல்பிடி’ என மருவிய தாகச் சொல்கிறார்கள், இக் கிராம வாசிகள்.
இந்தக் கல்யாண ராமர் கோயில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கல்யாணம் என்றால் மங்கலம் என்று பொருள். இந்தத் தலத்தில் வழிபடுபவர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது ஐதிகம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது கல்படி. நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக வெள்ளச்சந்தை வந்து, அங்கிருந்தும் கல்படிக்குச் செல்லலாம். அல்லது திங்கள்சந்தை எனும் ஊருக்குச் சென்று, அங்கிருந்தும் 5 கி.மீ. பயணித்து இக்கோயிலைச் சென்றடையலாம்.
ஆலயம் அறிவோம்
கல்படி கல்யாணராமன் ஆலயம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்
