கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

0
1

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்கும் பணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 21.57 கோடி மதிப்பீட்டில் பிரதான கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதையும் மணச்சநல்லூர் பேரூராட்சி பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

 

பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர்களை சுத்திகரிப்பதற்காக ரூபாய் 34.56 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி விரைவாகவும், தரமானதாகவும் நடைபெற்று வருகிறது.

2

வருகின்ற ஜனவரி 2021க்குள் இதற்கான சோதனை ஓட்டம் தொடங்கப்படவுள்ளது. அதற்கான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஒப்பந்ததார்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்து நவீன இயந்திரம் மூலம் உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் (1.12.2020)  நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் எஸ். எழிலரசன் உதவி நிர்வாக பொறியாளர் இ. வளவன் உதவி பொறியாளர் வைரமுத்து மற்றும் மனச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ். கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்

 

 

3

Leave A Reply

Your email address will not be published.