திருச்சியில் புதிய நியாயவிலைக்கடையை திறந்து வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர்:

0
Business trichy

திருச்சியில் புதிய நியாயவிலைக்கடையை திறந்து வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர்:

திருச்சி, ஏர்போர்ட் அண்ணாநகர் பகுதியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை, நியாயவிலைக்கடையை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் இன்று (2.12.2020) திறந்று வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

web designer

loan point

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப., அவர்கள், கூட்டுறவுச் சங்கத்தின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் கு.ப.வானதி, அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை தலைவர் ஏர்போர்ட் விஜி, திருச்சி சரக துணைப் பதிவாளர் கே.சித்ரா, நுகர்வோர் வாணிப கழக மண்டல மேலாளர் தா.சிற்றரசு, பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் திரு.ந.பத்மகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.