இந்திய செஞ்சிலுவை சங்கம் திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் பாதாம் பால் வழங்கல்

இந்திய செஞ்சிலுவை சங்கம் திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் பாதாம் பால் வழங்கல்
இந்திய செஞ்சிலுவை சங்கம் திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் பாதசாரிகளுக்கு
பாதம் பால் தாலுகா வாரியாக பொறுப்பாளர்களிடம் வழங்கி வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் வழங்கினார்கள்.

இந்திய செஞ்சிலுவை சங்கம் புயல் சீற்றம், நில நடுக்கம் போன்ற காலங்களில் ஏற்படும் இடர் பாடுகளின் போது பேரிடர் மேலாண்மை கொண்டு மக்களுக்கு உதவுவார்கள்.
பேரிடர் மேலாண்மை குழுவில் பாதிப்பை எதிர்கொள்ளும் பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் இருப்பர். இந்நிலையில், பருவகால சூழலினால் புயல், மழை, கடும் பனி என தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் குளிரினால் பாதிக்கப் படுபவர்களுக்கு ஊட்டச்சத்து பானமான பாதாம்பால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை தலைவர் ராஜசேகரன் தலைமையில் செயலாளர் ஜவஹர் ஹசன், மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், மேலாளர் குணசேகரன், ஆயுட்கால உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்களுக்கு பாதாம் பால் வழங்கினார்கள்.
