ஆரோக்கியம் ஆனந்தமே!

ஆரோக்கியம் ஆனந்தமே!
மன அமைதிக்கும்
மன மகிழ்ச்சிக்கும்
வழி வகுக்கும் தியானம்
மனஅமைதிக்கும், மன மகிழ்ச்சிக்கும் தியானம் மூலம் தன்னைத்தானே புரிந்துகொள்வதன் மூலம் மனதை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ளலாம். பொதுவாக ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் அனுபவித்த இன்பம், துன்பம்,பயம், கவலை, நம்பிக்கையின் ஒட்டு மொத்த உருவமாக இருந்து வருகிறார்கள்.

உணர்வின் அழுத்தத்தால் ஏற்படும் எண்ணம் அதன் விஷய அறிவை சேர்த்து மூளையில் பதிவாக சேமித்து வைத்திருக்கிறோம். அவையே எண்ணங்களாக, செயலாக உருவெடுக்கின்றன அனுபவம், அறிவு, நினைவு, எண்ணம், செயல் என தொடர்ந்து ஒரு கருவி போல செயல்பட்டு வருகின்றோம். தான் கற்ற அறிவிலிருந்து விடுதலை பெறுவதே இல்லை. இப்படிப்பட்ட சூழலில் தன் உண்மையான தன்மையை உள் ஆய்வாக தன்னை அறிவதற்கு மேற்கொள்ளும் பயிற்சியே தியானம். தியானப் பயிற்சியால் நம்மையும் சமூகத்தையும் சரியான கண்ணோட்டத்துடன் புரிந்து, புரிதலுடன் நடக்க இயலும். பிறந்தது முதல் இறுதி நாட்கள் வரை மனிதன் வெளி உலகத்துடன் விண்ணிலும், மண்ணிலும், கடலிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

வெளியுலக தொடர்பால் கிடைக்கும் அனுபவத்தையும் ஆனந்தத்தையும் உடலாலும் மனதாலும் அனுபவிக்கிறோம். ஆனந்தத்தைக் கொடுக்க கூடியதையும் உணர்வையும் நாம் நம்மையே கவனிப்பதால் நம்மை அறிந்து கொள்வதுடன் நமது உணர்வுகளோடு நேர்மறையாகவும் நடந்துகொள்ள தியானம் வழிவகுக்கிறது. தியான சகோதரர்களின் முதல் தகுதி ஒழுக்க நெறியைக் கடைப்பிடிப்பது தான். தியானம் மேற்கொள்ளும்போது உலகில் கடமைகளில் இருந்து விடுபட்டு அமைதியான நிலையில் தியான பயிற்சியில் ஈடுபடவேண்டும் ஒவ்வொரு மனிதனும் தனது சுக துக்கங்களை பிறருடன் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியற்ற சூழலில் உள்ள ஒவ்வொருவரது இறுக்கத் தன்மை அவர் பகிர்ந்து கொள்ளும் இன்னொரு மன இயக்கத்திலும் இருக்க தன்மையை ஏற்படுத்துகிறது. இவ்விரு சமூகத்தையும் பாதிக்கும் எவ்வளவோ உழைத்து வருமானத்தை பெருக்கி வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் மனவளம் என்பது பலருக்கு கிடைப்பது இல்லை தியானம் மனதின் செயல் முறைகளை குறிப்பிட்ட நெறி முறையோடு வழிபடுவதற்கு உழைப்புத் தேவை பயிற்சியில் புரிதல் ஏற்படும் வரை அயர்ச்சியும் சலிப்பும் ஏற்படும் தியானத்தில் மட்டுமே தன்னைத் தானே தணிக்கை செய்யாமல் தன்னைக் காண இயலும் தன்னைத்தானே கவனிக்கும் பொழுது நம்முள்ளும் எதிர்வினைகள் தப்பெண்ணங்கள் மன இறுக்கம் கண்டு உணரலாம் கண்டு உணர்வது மட்டுமல்ல மன இறுக்கங்களை கலையலாம் என நாள் பெரும்பாலான பிரச்சனைகள் எண்ணங்களாலே எழுகின்றன.
தியானம் செய்வதற்கு குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். தரை விரிப்பான் மீது அமர்ந்து சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நீண்ட நேரம் அமரும் வகையில் உடலை விறைப்பாக இல்லாமல் முதுகுத்தண்டு நேராக இருக்கும் நிலையில் தளர்வாக அமர வேண்டும். வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படி கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும். கண்களை மென்மையாக மூடிக்கொள்ளவும்
கவனத்தை சுவாச இயக்கத்தின் மேலே கவனம் வைத்திருக்க வேண்டும். உள் சுவாசத்தின் போது வயிறு விரிவடைவதையும், வெளி சுவாசத்தின் போது வயிறு சுறுங்குவதையும் உணரலாம்.தியானத்தின் போது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.
மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சுவாச இயக்கத்தின் உண்மையிலேயே கவனம் செலுத்த வேண்டும். தியானத்தை சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எந்த விஷயம் என்று அறிந்திருப்பதும், அவசியமாகும். இதனால் உள் விழிப்புணர்வு அதிகமாகும் மனம் அமைதி அடையும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பதை திருச்சிராப்பள்ளி அமிர்தா யோக மந்திரம் இயற்கை நலவாழ்வு மற்றும் யோக பாடசாலை யோகா ஆசிரியர் விஜயகுமார் தியானம் குறித்து எடுத்துரைத்தார். திருச்சி,புத்தூர் அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் மன அமைதிக்கும் மன மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும் தியானம் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்புக்கு
செல் 98424 12247
