
சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு அழைப்பு:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் திருச்சி கண்டோன்மென்ட் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்து அபிஷேகத்துக்கு நெய் கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெற்று கொள்ளலாம். காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும், காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும் தரிசனம் செய்யலாம்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மேலும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 10 வயதுக்குட்பட்டோருக்கும் அனுமதியில்லை. அபிஷேகம், பூஜை நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இத்தகவலை திருச்சி ஐயப்ப சங்கம் செயலாளர் வெள்ளாந்துரை வெளியிட்டுள்ளார்.
