மணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின் வேட்பாளர்கள் !

0
1

மணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1  கட்சிகளின் வேட்பாளர்கள் !

மணப்பாறை தொகுதி திருச்சி மாநகர் தொகுதிகளுக்கு அடுத்து மிக முக்கிய தொகுதியாக உள்ளது. பெருமளவில் கிராமப்புறங்களை உள்ளடக்கிய இந்த தொகுதி, விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டு உள்ளது. விவசாய நிலங்களை உள்ளடக்கிய இந்த தொகுதி தற்போது தனி மாவட்டம் என்ற கோரிக்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மேலும் மணப்பாறை மற்றும் வையம்பட்டி, மருங்காபுரி, விராலிமலை உள்ளடக்கிய பகுதிகளை தனி மாவட்டமாக அறிவிக்க பல்வேறு கட்சியினர் போராடி வருகின்றனர்.

 

2

2006ஆம் ஆண்டு வரை மருங்காபுரி என்று இருந்தது, பிறகு தொகுதி மறுசீரமைப்பின் போது மணப்பாறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மணப்பாறை தொகுதியில் மணப்பாறை நகராட்சி, பொன்னம்பட்டி பேரூராட்சி, புதூர், வையமலைப்பாளையம்,இராக்கம்பட்டி வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளவீரம்படி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி, கருமலை, அம்மாச்சத்திரம், எண்டப்புலி, கஞ்சநாயக்கன்பட்டி, வேலாக்குறிச்சி, வேங்கடநாயக்கன்பட்டி, மருங்காபுரி, டி.இடையப்பட்டி, யாகபுரம், நல்லூர், காரைப்பட்டி, செவல்பட்டி, இக்கரைகோசக்குறிச்சி, அக்கியம்படிட், அழகாபுரி, லெக்கநாயக்கன்பட்டி, தெத்தூர் மற்றும் செவந்தாம்பட்டி கிராமங்கள், ஆகிய பகுதிகள் கொண்ட ஒரு பெரிய சட்டமன்ற தொகுதியாக மணப்பாறை சட்டமன்ற தொகுதி உள்ளது.

 

மதிமுக மா.செ. மாணிக்கம்

இத்தொகுதியின் மிகப் பிரதான கோரிக்கையாக இருப்பது மணப்பாறைக்கு அரசு கல்லூரி அமைக்க வேண்டும். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக ஏதேனும் ஒரு தொழிற்சாலையை கொண்டு வர அரசு முனைப்பு காட்ட வேண்டும். என்பது அந்தத் தொகுதியின் மிக நீண்ட நெடுங்கால கோரிக்கையாக உள்ளது. அது வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

மணப்பாறை தொகுதியை பொறுத்தவரை 1977 முதல் அதிமுக 7 முறையும், 2 முறை திமுகவும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது. 2011- 2016 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவின் சந்திரசேகர் வெற்றி பெற்றுள்ளார். 2011 திமுக கூட்டணியில் காங்கிரஸ், 2016 ல் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சியும், அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 1,37,215 ஆண் வாக்காளர்களையும்,1,41,820 பெண் வாக்காளர்களையும், மேலும் 7 மூன்றாம் பாலினத்தவரையும் வாக்காளராக கொண்ட தொகுதி மணப்பாறை தொகுதியாகும்.

தற்போது மணப்பாறையை கைப்பற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. மேலும் வேட்பாளர் தேர்வுக்கும் பயங்கரப் போட்டி நிலவுகிறது. வேட்பாளராக களமிறங்க யார் யாருக்கு வாய்ப்பிருக்கிறது என்று சற்று விரிவாக பார்ப்போம்.

மணப்பாறை தொகுதியை, திமுக கடந்த காலங்களில் கூட்டணி கட்சிகளுகே ஒதுக்கி இருக்கிறது. தற்போது திமுக வினர் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்குவதாலேயே தோற்றுப் போகிறோம். எனவே இந்தமுறை திமுகவினருக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கின்றனர். இப்படியாக திமுகவை பொருத்தவரை மாவட்ட செயலாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவரம்பூர் தொகுதியை விட்டுவிட்டு இந்த முறை மணப்பாறை தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், ஒருவேளை கிழக்கு தொகுதி போகும் பட்சத்தில்.பன்னப்பபட்டி கோவிந்தராஜ், பிஎம் சபிபுல்லா, ஒன்றியச் செயலாளர் சி. ராமசாமி, வையம்பட்டி குணசீலன், வழக்கறிஞர் முரளி கிருஷ்ணா ஆகியோர் இடையே தொகுதியைக் கைப்பற்ற மிகப்பெரிய போட்டி நடக்கும் என்று கூறப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை 2 முறை வெற்றி பெற்ற சந்திரசேகர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். மேலும் பிவிகே பழனிச்சாமி தொகுதியை கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறாராம். ஒன்றிய கவுன்சிலர் சேது போன்றோரும் மணப்பாறை தொகுதியை கைப்பற்றும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய முஸ்லிம் லீக் கடந்த முறை மணப்பாறை தொகுதியில் போட்டியிட்டது. எம்எம் நிஜாம் 2 இடத்தைப் பெற்றார். ஆனால் இந்தமுறை முஸ்லிம்லீக் கிழக்கு தொகுதியை கேட்டு உள்ளது. கிழக்குத் தொகுதி கிடைக்காதபட்சத்தில், மணப்பாறை தொகுதியிலேயே எம்.எம் நிஜாம் களமிறக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

முஸ்லீம் லீக்
முஸ்லீம் லீக்

திமுகவின் மற்றொரு கூட்டணியாக இருக்கக்கூடிய மதிமுக மணப்பாறை தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. மணப்பாறையில் அரசு கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை மதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் சமீபத்தில் சமூக வலைத்தளம் வழியாக மிகப்பெரிய போராட்டமாக முன்னெடுத்தார். இது தொகுதி முழுக்க பேசு பொருளாக மாறி இருக்கிறார்.  அவரோடு மதிமுகவின் மாநில மகளிர் அணி செயலாளராக உள்ள மருத்துவர் ரோகையா ஆகியோர் வேட்பாளர் பட்டியில் உள்ளார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணப்பாறை தொகுதியில் தொடர்ந்து பல களப் போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணி இடமிருந்து மணப்பாறை தொகுதியை கேட்கும் என்று கூறப்படுகிறது. அப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி ஒதுக்கும் பட்சத்தில் மணப்பாறை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித் சட்டமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

சிபிஐ
சிபிஐ

காங்கிரஸ் கட்சியும் திமுகவிடம் இருந்து மணப்பாறை தொகுதியை கேட்கும் என்றும் கூறுகின்றனர் காங்கிரஸார். காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்ட சுப. சோமு மீண்டும் களமிறக்க படுவார் என்று கூறுகின்றனர்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய பிஜேபி மணப்பாறை தொகுததியை கூட்டணி இடமிருந்து கேட்கக் கூட வாய்ப்பில்லை, அவர்கள் முழு கவனமும் திருச்சியின் மற்றொரு தொகுதியின் மீது உள்ளது.

தேமுதிக தற்போதுவரை அதிமுக கூட்டணியில் உள்ளது. இந்த முறை தேமுதிக மணப்பாறை தொகுதியை அதிமுகவிடம் இருந்து கேட்கும் என்று கூறப்படுகிறது. வேட்பாளராக கிருஷ்ணகோபால் நிறுத்தப்படுவார். இவர் சென்றமுறை தேமுதிகவின் சார்பில் மக்கள் நல கூட்டணியில் இருந்து மணப்பாறை தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக
தேமுதிக

மக்கள் நீதி மையம் யார் யார் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளவர்கள் என்றப் பட்டியலைத் தயார் செய்து வருகிறதாம்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி நிர்வாகிகள் சீமானை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்குப் பிறகு வேட்பாளர் தேர்வு உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்தப் பட்டியலில் இருக்கக்கூடிய நபர்களே மணப்பாறை தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது.

-மெய்யறிவன், ஜெ.கே

 

3

Leave A Reply

Your email address will not be published.