திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ராக்கெட் விடும் நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ராக்கெட் விடும் நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள்
டெல்லியில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடைசெய்ய வேண்டும், விவசாயிகளை இழிவுபடுத்து அவதூறாக சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இது போன்ற கோரிக்கைகள் அடங்கிய ராக்கெட்டை திருச்சியில் இருந்து இந்திய பிரதமர் மோடிக்கு விட்டு, பதில் வரும் வரை காத்திருப்பு போராட்டத்தினை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தினர்.
