திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று (30.11.2020)வியாபாரம் தொடக்கம்:

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று (30.11.2020) வியாபாரம் தொடக்கம்:
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று (30.11.2020) முதல் வியாபாரம் துவங்குகிறது. 29.11.2020 சனிக்கிழமை மாலை 6 மணிக்கே வியாபாரம் தொடங்குவதாக திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் மராமத்துப் பணிகள் நிறைவடையாததால் இன்று (30.11.2020) மாலை 6 மணி முதல் வியாபாரத்தை தொடங்க உ்ள்ளனர்.

காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் இரவு 9 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 5 மணி வரை நடைபெறும். சில்லரை வியாபாரம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தூய்மைப் பணி நடைபெறும்.

வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், பொதுமக்களும் இந்த நேரக்கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். என காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்கத் தலைவர் வீ.கோவிந்தராஜீலு தெரிவித்துள்ளார்.
