அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கள ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்டத்திற்கான 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த கள ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் திருச்சியில் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஆர்.மனோகரன், அம்மா பேரவை செயலாளர் S.மாரியப்பன் கென்னடி, கழக அமைப்பு செயலாளர்கள் S.K.தேவதாஸ், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.காரத்திகேயன், கழக செய்தி தொடர்பாளர் அதிவீரராம பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
அதுசமயம், மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வார்டு, கிளை கழக செயலாளர்கள் & நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் & நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
