திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :

0
1

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் அறிவிப்பு:

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலுக்கு கார்த்திகை மாதத்தினை முன்னிட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை தருவார்கள். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவலை தவிர்க்கும் பொருட்டு இன்று (28.11.2020) முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா முடியும் வரை சுவாமி தரிசனத்திற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பேருந்து மற்றும் வேன்களில் வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு சென்றுவர வேண்டும்.

கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் சித்திரை வீதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு சுவாமி தரிசனத்திற்கு சென்றுவர வேண்டும். உத்திரை வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் அனுமதி கிடையாது. உத்திரை வீதிகளில் குடியிருப்பவர்கள் தங்களது வாகனங்களை உத்திரை வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தி போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அறிவித்துள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.