திருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை தீபதிருநாள் வழிபாடு:

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை தீபதிருநாள் வழிபாடு:
கார்த்திகை தீப திருநாள் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டப்படும் படும் பண்டிகை.

கார்த்திகை தீப திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். இதையொட்டி மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 6 ஆயிரம் மீட்டர் நீள திரி மற்றும் 800 கிலோ எடைக்கொண்ட பருத்தி துணி வைக்கப்பட்டு, அதில் 6 ஆயிரம் லிட்டர் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்ற தயார்நிலையில் உள்ளது. இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக்கூடியதாகும். இன்று மாலை மலைக்கோயில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் இளம்விளக்கு எனப்படும் சிறிய தீபம் ஏற்றி வைக்கப்படும். நாளை மாலை அதிலிருந்து பெறப்படும் ஜோதியிலிருந்தே மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

இந்த தீபத்திருநாளில் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை.
