திருச்சியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

0
1

திருச்சியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி காட்சி
மூலமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், அந்தநல்லூர், திருவெறும்பூர், மணிகண்டம், மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி,முசிறி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம், புள்ளம்பாடி, இலால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய வட்டாரங்களில் நேற்று (27.11.2020) நடைபெற்றது.

அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் நடைபெற்ற காணொளி கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் காணொளி காட்சி மூலம் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் எடுத்துரைத்தனர்.

2

அவர்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் காணொளி காட்சி மூலம் மாவட்டத்தில் ரபி சிறப்பு பருவத்தில் இதுவரை மக்காச்சோளம் பயிர் செய்துள்ள 43,000 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இந்த மாதம் 30.11.2020 கடைசி தேதியாக இருப்பதால் மீதமுள்ள 4 நாட்களில் விவசாயிகள் தங்கள் பயிர் செய்துள்ள பயிர்களை அதிக அளவில் காப்பீடு செய்ய வேண்டும். நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் அனைத்து வகையான உரங்களும் இருப்பில் உள்ளது. நமது மாவட்டத்தில் இதுவரை 1 இலட்சம் ஏக்கரில் சம்பா நடவுப்பணி முடிவடைந்துள்ளது.

நெல் பயிருக்கும் காப்பீடு செய்ய நவம்பர் 30ம் தேதி கடைசி தேதியாக இருப்பதால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிகஅளவில் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும். விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்கத்தை தடுக்க கால்நடைத்துறையின் மூலம் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் தற்போது அந்தந்த கிராமத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி (PDR) என்ற நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வருகின்ற ஜனவரி 2021 முதல் போடப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பதில் அளித்தார்.

மேலும், விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) அவர்களிடம் நடவடிக்கையின் பொருட்டு அளித்திட கேட்டுக்கொண்டார். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்காணொளி கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.