நிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கிய விமான சேவை:

நிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கிய விமான சேவை:

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானசேவை ரத்து செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது நிவர் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து நேற்று மீண்டும் விமான சேவை தொடங்கியது.
அதன்படி, திருச்சியிலிருந்து சென்னைக்கு 2 விமானங்கள், பெங்களூருக்கு 2 விமானங்கள், மற்றும் ஐதராபாத்துக்கு ஒரு விமானமும் இயக்கப்பட்டது. மேலும், வந்தேபாரத் திட்டத்தின் கீழ் நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் செல்லும் விமானமும், இரவு 9.40 மணிக்கு சிங்கப்பூர் செல்லும் விமானமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
