திருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து தொடர் – 1 ; முழுமையான அலசல் !

0
1

திருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து தொடர் – 1 ; முழுமையான அலசல் !

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி மாநகரப் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ பிள்ளைமார், இசுலாமியர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஜாதிகள் நிறைந்த  தொகுதியாக இருக்கிறது.

2006 ஆம் ஆண்டு வரை திருச்சி இரண்டாவது சட்டமன்ற தொகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி என்று அழைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதி மன்றம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மாநகராட்சி மைய அலுவலகம், திருச்சி மாவட்ட தலைமை ரயில் நிலையம், என்ற முக்கிய மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் இந்தப் தொகுதியிலேயே அமைந்துள்ளன.

2

 திருச்சி மாநகராட்சி வார்டு எண் 39, 40,41,42 மற்றும் 44,45,46,47,48,49,50,51,52,53,54,55,56,57,58,59,60 ஆகிய 21-வார்டு கடை உள்ளடக்கியது பகுதி மேற்கு சட்டமன்ற தொகுதி ஆகும். 

 

1957 முதல் 7 முறை திமுகவும், 6 முறை அதிமுக வும், இரண்டு முறை கம்யூனிஸ்ட் கட்சியும் இத்தொகுதியை கைப்பற்றியுள்ளது. 2006 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட கே .என் .நேரு வெற்றி பெற்று போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றினார். பிறகு 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் சார்பில் மரியம்பிச்சை வெற்றி பெற்று, பதவியேற்பு விழாவிற்கு சொல்லும் பொழுது சாலைவிபத்தில் உயிரிழந்தார். அதனால் நடைபெற்ற இடைத்தேர்தலில் மு. பரஞ்சோதி வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். பிறகு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கே என் நேரு மீண்டும் வெற்றி பெற்றார்.

இவ்வாறாக முந்தைய சட்டமன்ற தேர்தல் வரை திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி நிலவரம் இப்படி இருக்க, வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சி சார்பில் யார் யார் வேட்பாளர்கள், யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற திருச்சி மேற்குத் தொகுதி பற்றிய முழுமையான தகவல்களை அங்குசம் ஆராய்ந்து வெளியிடுகிறது.இது முழுக்க முழுக்க பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு கலந்துரையாடலில் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட செய்தியாகும்.

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் 1,25,506 ஆண் வாக்காளர்களையும், 1,34,512 பெண் வாக்காளர்கள்யும், 16 மூன்றாம் பலினத்தை சேர்ந்தவர்களையும் வாக்காளர்களாக கொண்ட தொகுதி இதுவாகும்.

இந்த தொகுதியில் லால்குடி அன்பிலிருந்து இடம் பெயர்ந்து திருச்சிக்கு வந்த தர்மலிங்கம் ஆளுமைக்கு பிறகு அன்பில் பொய்யாமொழிக்கு பிறகு கள்ளர் இனத்தை சேர்ந்தவர் தக்க வைத்து கொண்டர், அவர் மறைக்கு பிறகு அவர் தம்பி பெரியசாமி, அடுத்து லால்குடியில் இருந்த மா.செ. நேரு தன்னுடைய வீட்டை மேற்கு தொகுதிக்கு மாறிய பிறகு இந்த தொகுதியில் வென்று அமைச்சர் ஆனார் . தற்போது திமுக சார்பில் திமுகவின் முதன்மை செயலாளராக உள்ள கே என் நேரு மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் இவர் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பதால் அவர் சென்னையில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், அப்படி போட்டியிடும் பட்சத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஜெ .அன்பழகன் தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் களம் காண்பார் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை கே என் நேரு சேப்பாக்கம் சென்றால் திமுகவின் சார்பில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில், கே .என் .நேருவின் மகனான அருண் நேருக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மேலும் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே .என். நேரு தொகுதி என்பதால் கூட்டணி கட்சியினர் மேற்குத் தொகுதியை கேட்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், அதற்கு பதிலாக திருச்சியின் வேறு தொகுதிகளை திமுகவிடம் முன் வைப்பார்கள் என்று கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர்.

திமுக

அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர் நல்லுசாமி மகனான மருத்துவர் செந்தில் குமார் நிறுத்தப்படுவர் என்றும், இவர் கிழக்கு-மேற்கு 2 தொகுதிகளை முன்வைத்து மேற்கில் போட்டியிட ஆர்வம் காட்டுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பரஞ்சோதி, சிவானி கல்லூரி செல்வராஜ், மற்றும் மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 58 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்தவரும், தற்போது ஸ்ரீரங்கம் எம்எல்ஏவாக உள்ள அமைச்சர் வளர்மதி க்கு கூறப்படுகிறது. மேலும் அதிமுகவின் பகுதி செயலாளர் பூபதியும் மேற்கு தொகுதியை கேட்பார் என்று சொல்லப்படுகிறது.

அதிமுக

பிஜேபி யின் சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முழு கவனம் செலுத்துவதால், மேற்கு தொகுதியில் அதிமுக போட்டியிடவே மிக அதிக வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர்.

மேலும் அமமுக வின் சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், இளைஞர் அணிச் செயலாளர் ஜோதி வாணன், அவைத் தலைவர் ராமலிங்கம, மகளிர் அணி செயலாளர் சித்ரா விஜயகுமார், அம்மா பேரவை செயலாளர் சரவணன் ஆகியோர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளதாக சொல்கின்றனர்.

அமமுக

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் தேர்வுக்காக இன்னும் ஒரு வாரத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சீமானை சந்தித்து உள்ளார்கள். அதற்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும்.

மக்கள் நீதி மையத்தினர் தேர்தலின் முதல் கட்ட பிரச்சார பயணத்தை திருச்சியிலிருந்து தொடங்க திட்டமிட்டு இருந்தனர். புயலின் காரணமாக கமலஹாசனின் பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டதால் வேட்பாளர் தேர்வுக்கு இன்னும் இரு வார கால தாமதம் ஆகும்.

திருச்சி மேற்கு தொகுதியில் பொருத்தவரை மேலே குறிப்பிடப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மெய்யறிவன், ஜித்தன்

3

Leave A Reply

Your email address will not be published.