குண்டர் சட்டத்தில் திருச்சி இளைஞர் கைது..

0
Business trichy

குண்டர் சட்டத்தில் திருச்சி இளைஞர் கைது..

திருச்சி திருவெறும்பூர் பகுதிகளில் சமீபகாலமாக வழிப்பறி போன்ற தொடர் குற்றச் சம்பவங்களில் சில மர்ம ஆசாமிகள் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதனடிப்படையில் திருவரம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வலைவிரித்து தேடியதில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி திருவெரும்பூர் மலை கோவில் பகுதியை சேர்ந்த மணிமேகலை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மணிமேகலை அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர்.

web designer

அதனடிப்படையில் புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்ட திருவெறும்பூர் போலீசார் திண்டுக்கல் வேல்வார்கோட்டை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் தாலிப் ராஜா (வயது- 28) மற்றும் அவரது நண்பரையும் அக்டோபர் 24-ஆம் தேதி கைது செய்தனர். அந்நபர்களிடம் நடத்திய விசாரணையில் வாலிப ராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்கு இருப்பது தெரியவந்தது இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் (பொறுப்பு) உத்தரவின்பேரில் தாலிப் ராஜா குண்டாஸ் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்..

loan point

-ஜெ.கே

IAS academy

Leave A Reply

Your email address will not be published.