திருச்சி மேற்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் 1 ; கே. என்.நேரு திருச்சி மேற்கா, சென்னையா.?

0
Business trichy

திருச்சி மேற்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் 1 ; கே. என்.நேரு திருச்சி மேற்கா, சென்னையா.?

திருச்சி மேற்கு தொகுதியைப் பொறுத்தவரை மாநகர பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும், இந்த தொகுதியை பொறுத்தவரை கே என் நேரு-வுக்கு என்றே தனி ஓட்டு வங்கி உள்ளது. மேலும் மேற்குத் தொகுதியை பொறுத்தவரை கே என் நேரு நன்கு பரிச்சயமான தொகுதியாகும். ஏற்கனவே அந்த தொகுதியில் வெற்றிபெற்று போக்குவரத்து துறை அமைச்சராகவும் செயல்பட்டு இருக்கிறார். தற்போதும் இவரே இந்த தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மேலும் கொரோனா காலத்தில் தனது சொந்த செலவில் ஒவ்வொரு வார்டுகளிலும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

loan point
web designer

மேலும் கே.என்.நேரு வை வீட்டின் சுபகாரியங்களுக்கு யார் அழைத்தாலும் சென்று விடுவார், துக்க காரியமானாலும் அங்கு அவரைப் பார்க்க முடியும், இப்படி தொகுதியை கடந்து மாவட்டம் முழுக்க செல்வாக்குப் பெற்றவராக உள்ளார். இப்படியாக மேற்கு தொகுதியின் தனிப்பெரும் ஆளுமையாக உள்ள கே என் நேரு, இந்த முறையும் திருச்சி மேற்கு தொகுதியிலே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருப்பதாலும், முதன்மைச் செயலாளராக பொறுப்பு வைகிப்பதாலும் அவர் சென்னையிலேயே அதிகம் இருக்க நேரிடுகிறது. இதனை காரணம் காட்டி, நேருவை திருச்சியை விட்டு காலி செய்து, சென்னையில் ஐக்கியமாக்க ஒரு குழு செயல்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் நேரு சென்னைக்கு செல்லும் பட்சத்தில் நேருவின் மகனான அருண் நேருவை மேற்கு தொகுதியின் வேட்பாளராக நிறுத்த ஆலோசனை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

nammalvar

இந்தநிலையில் கே. என்.நேரு வை, கொரோனாவால் உயிரிழந்த அன்பழகனின் தொகுதியான சென்னை சேப்பாக்கத்தில் களமிறக்க அந்தக் குழு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ஆனால் கே என் நேருவுக்கு திருச்சிக்கு மேற்கு தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு செல்ல மனமில்லையாம்.

அதனால் கே .என்.நேரு தலைமையிடம் மேற்கு தொகுதியையே முன்வைப்பார் என்று கூறுகின்றனர் முக்கிய உடன் பிறப்புகள்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.