தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினம்

0
Business trichy

தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினம்

வேலுப்பிள்ளை பிரபாகரன்
(Velupillai Prabhakaran,
(1954 – 2009)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார்.
1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

வேலுப்பிள்ளை பிரபாகரன்
பிறப்பு
நவம்பர் 26, 1954
வல்வெட்டித்துறை, இலங்கைத் தீவு

loan point

இறப்பு
18 மே 2009 (அகவை 54)
முல்லைத்தீவு, இலங்கை

nammalvar
web designer

வாழ்க்கைத்
துணை
மதிவதனி (1984–2009)

பிள்ளைகள்
சார்ல்சு ஆன்டனி (1989–2009)
துவாரகா (1986–2009)
பாலச்சந்திரன் (1997–2009)

உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில், அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அத்துடன் அவரது மூத்த மகன் சார்லஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது.

வரலாற்றில் நவம்பர் 26
தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.