திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு :

0
D1

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு :

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இந்திய ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் நமது இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட 71 வது ஆண்டு தினத்தினை கொண்டாடுகின்ற வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் நிகழ்வாக அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 26ஆம் நாள் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையினை அனைவரும் வாசித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

N2

அதனடிப்படையில், இன்று (26.11.2020) காலை 11.00 மணிக்கு அனைத்து அரசு
அலுவலர்களும், மாவட்ட வருவாய் அலுவலர்  திரு.த.பழனிகுமார் அவர்கள் தலைமையில் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

D2

இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச் சமுதாயமும் சமய சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசு நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும், தனிமனிதனின் மாண்பு,  நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, இங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.