திருச்சி கிழக்கு தொகுதி பஞ்சாயத்து -2, முழுமையான பொலிட்டிக்கல் கரண்ட் அப்டேட் !

0
1

திருச்சி கிழக்கு தொகுதி பஞ்சாயத்து  -2, முழுமையான பொலிட்டிக்கல் கரண்ட் அப்டேட் !

திருச்சியின் மிக முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது தான் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி.இது மிகவும் பழமையும் பாரம்பரியமும் கொண்ட சட்டமன்ற தொகுதியாக உள்ளது. திருச்சியின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆகும். 1951 ஆம் ஆண்டு முதல் திருச்சி -1வது சட்டமன்ற தொகுதி என்றழைக்கப்பட்டு வந்தது, பிறகு 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1984,1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் மலர்மன்னன்,1991 அதிமுகவின் ஆரோக்கியசாமி, 1996,2001, தேர்தல்களில் திமுக வின் பரணிகுமார், 2006 திமுகவின் அன்பில் பெரியசாமி, 2011 அதிமுகவில் மனோகரன், 2016 அதிமுகவின் நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

திருச்சி மாநகராட்சியின் 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 33, 34, 35, 37, 38, 43 ஆகிய 25 வார்டுகளைக் கொண்டது திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி. மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1,19,657 ஆண் வாக்காளர்களையும், 1,26,530 பெண் வாக்காளர்களையும்,39 மாற்று பாலினத்தைச் சேர்ந்தவர்களையும், வாக்காளர்களாக கொண்ட தொகுதி இதுவாகும்.

2

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைத்த வெல்லமண்டி நடராஜன் 79.938 வாக்குகள் பெற்று, திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜெரோம் ஆரோக்கியராஜ்-யை வெற்றி பெற்றார். மேலும் வெல்லமண்டி நடராஜன் தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்தலில் மூன்றாவது இடத்தில் மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் மருத்துவர் ரோகையா இடம் பிடித்தார். பிஜேபியை சேர்ந்த ராஜையன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

இவ்வாறாக கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைய இன்னும் சிறிது மாதங்களில் தமிழ்நாட்டிற்கு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தற்போது திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், எந்தெந்த அரசியல் கட்சிகளின் சார்பில் யார் யார் வேட்பாளராக களமிறக்க படுகிறார்கள் என்பதைப் பற்றிய angusam.comntrichy.com ஆகிய தளங்களின் இணைதள செய்தியாளர்களின் கள ஆய்வின் அடிப்படையில் வகுக்கப்பட்ட தெளிவான பார்வை  இது.

கார்த்திகேயன் – ஜவஹர்

திருச்சி கிழக்கு திமுகவைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான வரும் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான மகேஷ் பொய்யாமொழி கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆவார். மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சியின் 3 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன அதில் ஒன்றுதான் கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆகும்.

மகேஷ் பொய்யாமொழி தற்போது திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் மகேஷ் பொய்யாமொழி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை அல்லது திருச்சி கிழக்கில் போட்டியிட்ட கூடும் என்று தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டுயிருக்கிறார்கள்.

மருத்துவர் ரொகையா

அதே சமயத்தில் திமுக முன்னாள் துணை மேயர் அன்பழகன் அல்லது வழக்கறிஞர் பாஸ்கர் ஆகியவர்களுக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதியை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மகேஷ் பொய்யாமொழி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடாத பட்சத்தில், கே.என். நேரு கைகாட்டும் நபரே அங்கு வேட்பாளராக இருப்பார் என்கிறார்கள்.

அதே சமயத்தில் திமுக கூட்டணியில் நீண்ட நெடுங்காலமாக உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக கூட்டணி இடமிருந்து கிழக்கு சட்டமன்ற தொகுதி கேட்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட்ட எம் .எம். நிஜாம், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் கிழக்கு தொகுதியில் நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் உள்ளார். மற்றும் திமுகவில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு, அதிக போட்டி நிலவுவதால் கே. என். நேருவுக்கு அடுத்த ஆப்ஷனாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை, கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.

முஸ்லிம் லீக் – நிஜாம்

மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவின் சார்பில் மருத்துவர் ரோகையா போட்டியிட்டார். தற்போது மதிமுக, திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதாலும், ரோகையா ஏற்கனவே அறியப்பட்ட முகம் என்பதாலும், ரோகையா மீண்டும் வேட்பாளராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மதிமுகவின் சார்பில் மருத்துவர் ரோகையாவிற்கு கண்டிப்பாக சீட்டை வாங்கி, அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு மதிமுகவினர் இருப்பதாக கூறப்படுகிறது.

தமுமுகவும் இந்த தொகுதியை கேட்க உள்ளது. அப்படி தமுமுகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் தமுமுகவின் தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டிய லூயிஸ் அடைக்கலராஜ் -க்கு அதிக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியை கேட்டார். இந்த நிலை தான் திருநாவுக்கரசுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதனால் திருச்சியில் எந்த சட்டமன்ற தொகுதி என்றாலும் லூயிஸ் அடைக்கலராஜே வேட்பாளராக களமிறங்குவார் என்று காங்கிரஸார் கூறுகின்றனர்.

ஜெ.சீனிவாசன்

அதிமுகவின் வசமே தற்போது கிழக்கு சட்டமன்ற தொகுதி உள்ளது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். தற்போது வெல்லமண்டி நடராஜன் எம்எல்ஏவாக போட்டியிட விரும்பவில்லை என்றும் தனது மகன் ஜவகர் – க்கு எம்எல்ஏ சீட்டு வாங்கித் தர விரும்புவதாக கூறப்படுகிறது. அதேசமயத்தில் அதிமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ள ஆவின் கார்த்திகேயன் கிழக்கு சட்டமன்ற தொகுதியை குறிவைத்து ஒரு மாதத்திற்கு முன்பாகவே தனது தேர்தல் பணியை தொடங்கி விட்டார். திருச்சி கிறிஸ்தவ குருமார்கள், முஸ்லீம் குருமார்களை சந்தித்து ஆசீர் பெற்று தேர்தலுக்கான வேலையை ஆரம்பித்துவிட்டார். மேலும் இவர் ஆவின்-னின் தற்போதைய சேர்மனாக உள்ளார். அவர் முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதால் கிழக்குத் தொகுதியை கார்த்திகேயன் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமமுகவின் சார்பில் அதன் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்  கிழக்கு தொகுதியின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சமூகத்தை சேர்ந்த இவர் தொடர்ந்து 4 முறை அதே கிழக்கு தொகுதியில் வேறு வேறு வார்டுகளில் கவுன்சிலர் முதல் துணைமேயர் வளர்ந்து இருக்கும் அவர் தற்போது கிழக்கு தொகுதியை கைப்பற்றும் முயற்சியிடன் செயல்பட்டு வருகிறார்.

அதிமுகவின் முக்கிய கூட்டணி கட்சியாக உள்ள பிஜேபி, கிழக்கு சட்டமன்ற தொகுதியை குறி வைத்து தனது காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே காந்தி மார்க்கெட் பிரச்சனையில் பிஜேபியின் தலையீடு அதிகமாக உள்ளதாகவும் பிஜேபியினர் கூறுகின்றனர். பிஜேபி திருச்சியில் எந்தத் தொகுதி வாங்கினாலும் ஆர்எஸ்எஸ் – ன் திருச்சி மாவட்ட செயலாளர் இளங்கனூர் மணிகண்டன் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன் அல்லது கிழக்கு இளைஞரணி தலைவர் வெங்கடேஷ் என்கிற சுதாகர் மற்றும் புதிதாக பிஜேபியில் சேர்ந்துள்ள தமாக சேர்ந்த ஜெய்கர்ணா போன்றோர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்ளதாகவும் செல்கின்றனர். மேலும் தமிழகத்திற்கு வருகை தந்த அமித்ஷா விடம் தமிழகத்தின் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்ற தொகுதிகளுக்கான பட்டியலும் வேட்பாளருக்கான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பிரதான இரு அரசியல் கட்சிகள் இவ்வாறாக கிழக்கு சட்டமன்ற தொகுதி குறிவைத்து செயல்திட்டங்களை நகர்த்தி வர, நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறாக மக்கள் நீதி மையத்தின் சார்பில் வழக்கறிஞர் கிஷோர் குமார்-ருக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் நீதி மையத்தின் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் உள்ளதாக கூறுகின்றனர், மக்கள் நீதி மையத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பிரபுவிற்கு கிழக்குத் தொகுதி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2016 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் நாடாளுமன்ற வேட்பாளராக களம் இறங்கிய சாய் வினோத், மகேஷ் பொய்யாமொழி எந்த தொகுதியில் நிற்கிறாரோ அவரை எதிர்த்து தேர்தலில் களம் காண திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர் தம்பிகள்.

கிழக்கு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை இந்த பட்டியலில் உள்ளவர்களே, அந்த அந்த அரசியல் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.

-மெய்யறிவன், ஜெ.கே

3

Leave A Reply

Your email address will not be published.