திருச்சி கிழக்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் – 3 ; அதிரடியாக களம் இறங்கிய இனிகோ !

0
Business trichy

திருச்சி கிழக்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் – 3 ; அதிரடியாக களம் இறங்கிய இனிகோ !

திருச்சி கிழக்கு தொகுதியைக் கைப்பற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளிடமும் போட்டா போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது, முந்தைய பதிவுகளில் அதை விளக்கமாக பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேலாக திமுகவிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வரக்கூடிய இயக்கமாக இருக்கக்கூடிய, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் கிழக்குப் தொகுதியை கைப்பற்றும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ‌

loan point

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் தொடங்கப்பட்டு 11 வருடங்கள் ஆகின்றது. அதனுடைய நிறுவன – தலைவர் இனிகோ இருதயராஜ் திமுகவுடனும், அதனுடைய தலைவர்களுடனும் மிகவும் நெருக்கமானவர். இந்த இயக்கம், தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டு, 26 மாவட்டங்களில் பொறுப்பாளர்களை நியமித்து செயல்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளுடனும் அதன் தலைவர்களுடனும் மிகவும் நெருக்கமானவராக இனிகோ இருதயராஜ் உள்ளார். மேலும் திருச்சியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்.

nammalvar

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 8 ஆண்டுகளாக திமுக தலைவராக இருந்த கலைஞரையும் பிறகு மு‌ .க. ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைத்து சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்.சென்ற ஆண்டு திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் பதினோரு ஆயிரம் பேரைக் கொண்டு திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் அழைத்து பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தினார். மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு தனது ஆதரவை அளித்து வந்துள்ளார்.


தற்போது வரை இருக்கக்கூடிய சட்டமன்ற தேர்தலில், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவன தலைவர் இனிகோ இருதயராஜ் கிழக்கு தொகுதியை கைப்பற்றும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். திருச்சியில் உள்ள 13 திருசபைகளுக்கும் சென்று, அதன் குருமார்களை சந்தித்து உள்ளார். அதோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு ஆதரவு கோரி வருகிறார்.

web designer

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தில் திருச்சி கிழக்கு தொகுதியை மூன்றாக பிரித்து தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற நிர்வாகிகளை நியமனம் செய்து தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளார். இந்த தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளர்கள் மற்றும் சிறுபான்மையினர்கள் அதிகம் என்பதால் இந்தத் தொகுதியை தேர்வுச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்லாமிய இயக்கங்களுடனும் இனிகோ மிகவும் நெருக்கமானவராக உள்ளார். தற்போது திருச்சியின் கிழக்கு தொகுதியில் தேர்தல் களப் பணிகளை உன்னிப்பாக செய்து வருவதோடு, திமுக தலைவருடன் கிழக்கு தொகுதி பற்றி தொடர்ந்து பேசி வருகிறாராம். மேலும் திமுக தலைவரை சென்னையில் சென்று சந்தித்த‌ பிறகே கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கியதாக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இனிகோ இருதயராஜ், மகேஷ் பொய்யாமொழி யுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். தற்போது மகேஷ் பொய்யாமொழியும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், இனிகோ இருதயராஜ் நேரடியாக திமுக தலைமையிடம் தொகுதி பற்றி பேசி வருகிறாராம்.

 

இது தொடர்பான முந்தைய கட்டுரை

 

திருச்சி கிழக்குத் தொகுதி பஞ்சாயத்து – 1, வேட்பாளர் ஜவாஹிருல்லா… ?

 

 

திருச்சி கிழக்கு தொகுதி பஞ்சாயத்து -2, முழுமையான பொலிட்டிக்கல் கரண்ட் அப்டேட் !

IAS academy

Leave A Reply

Your email address will not be published.