கோமாதாக்களுக்கு பரவும் தொற்றுநோய் மக்களே உஷார்:

0
Business trichy

கோமாதாக்களுக்கு பரவும் தொற்றுநோய் மக்களே உஷார்:

இலம்பி தோல் நோய் (LUMPUY SKIN DISEASE) வைரஸ் நச்சுயிரியால் ஏற்படும் அம்மை வகையைச் சார்ந்தது. இந்த நோய் பூச்சி கடி மூலம் பரவுகிறது. இந்நோய் தாக்கிய மாடுகளின் தோலின் மேல் கட்டிகள் தோன்றும். சில மாதங்களில் வடுக்கள் மறைந்து ரோமம் முளைத்து விடும். மாடுகள் மற்றும் மாடுகள் கட்டப்பட்டுள்ள தொழுகைகளை சுத்தமாக பராமரித்தல் பூச்சிகள் பெருகாமல் நோய் பரவுதலை தடுக்க முடியும்.

கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிப்பதன் மூலம் இந்நோய் தாக்காமலும் மற்ற கால்நடைகளுக்கு பரவாமலும் தடுக்கலாம்.

loan point

நோய் பரவும் முறை:

nammalvar
 • கொசு, ஈ, உண்ணி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக இந்த நோய் பரவுகிறது
 • கோடைகால தொடக்கத்தில் இந்த நோய் அதிக அளவில் பரவுகிறது.
 • கறவையாளர்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.
 • கன்று குட்டிகள், பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும்போது நோய் தொற்று ஏற்படுகிறது.
 • இந்த நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாடு வாங்கி வந்தால் அதன் மூலமாகவும் பரவுகிறது.
 • இந்த வைரஸ் கிருமியானது நாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18 முதல் 35 நாட்கள் வரை வாழும்

அறிகுறிகள்:

1.கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் ஒழுகுதல் போன்றவை ஆரம்ப அறிகுறிகள்

2. கடுமையான காய்ச்சல் இருக்கும்.

3. மாடுகள் சோர்வாக காணப்படும்.

4. உடல் முழுவதும் சிறு கட்டிகளாக வீக்கம் காணப்படும்.

5. இந்த கட்டிகளின் அகலம் 0.5-5 செ.மீ வரை இருக்கும்.

6. உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறும்.

7. கால்கள் வீங்கி இருக்கும்.

8. நிணநீர் சுரப்பிகள் பெரிதாக காணப்படும்.

 

web designer

நோய்த் தொற்றின் பாதிப்புகள்:

 • இந்த நோய் தொற்று 60% மாடுகளை பாதிக்கும்.
 • பால் உற்பத்தி குறையும்.
 • சினை பிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும்.
 • தீவனம் சரியாக உட்கொள்வதால் உடல் எடை குறைந்து காணப்படும்.
 • காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும்.
 • இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
 • சில மாடுகளில் மடி நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
 • அதிக அளவில் நோய்த் தொற்று ஏற்பட்டாலும் இறப்பு சதவிகிதம் மிகக் குறைவு.

 

சிகிச்சைகள்:

 • இந்த நோய்க்கு தற்சமயம் தடுப்பூசி அதனால் வருமுன் காப்பதே நல்லது.
 • உடல் ஏற்படும் வீக்கங்களையும், காயங்களையும் தகுந்த சிகிச்சை அளித்து வந்தால் மாட்டின் உற்பத்தித்திறனை தக்க வைக்கலாம்.
 • நோய் அறிகுறி தென்பட்ட உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவரை அணுகுவது சிறந்தது.

மூலிகை மருத்துவம்:

1. வாய் வலி மருத்துவம்:

 • வெற்றிலை 10 எண்ணிக்கை,
 • மிளகு 10 கிராம்,
 • கல் உப்பு 10 கிராம்,
 • வெல்லம் தேவையான அளவு

தயாரிப்பு முறை:  மேற்கூறியவற்றை அரைத்து தேவையான அளவு நான்கினில் தடவிக் கொடுக்க வேண்டும். முதல் நாள், இரண்டாம் நாளிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறை தரவேண்டும்.

2. வெளிப் பூசு மருந்து:

 • குப்பைமேனி இலை ஒரு கைபிடி
 • வேப்பிலை ஒரு கைபிடி
 • துளசி இலை ஒரு கைபிடி
 • மருதாணி இலை ஒரு கைப்பிடி
 • மஞ்சள் தூள் 20 கிராம்
 • பூண்டு 10 பல்
 • வேப்பெண்ணெய்/நல்லெண்ணெய் 500மிலி

தயாரிப்பு முறை: மேற்கூறியவற்றை அரைத்து 500மிலி எண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆற விட்டு காயங்களை சுத்தப்படுத்திய பின் மருந்தை மேலே தடவ வேண்டும்‌.

தடுப்பு முறைகள்:

 • பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையில் இருந்து தனிமைப்படுத்தி முடிந்தவரை தனி நபர் மூலம் பராமரிக்க வேண்டும்.
 • சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 • பாதித்த மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரம் தனியாக இருக்க வேண்டும்.
 • கறவையாளர்கள் பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகே மற்ற மாடுகளை தொட வேண்டும். பாதிக்கப்பட்ட கறவை மாடுகளை இறுதியாக பால் கறவை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நோய் முதல் முறையாக நம் நாட்டில் பரவி வருவதால் பண்ணை அளவில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை களையும் எடுப்பதே நோய் பரவலை தடுக்கும். சுத்தமான கொட்டகை, சுத்தமான பால் கறவை முறை சுத்தமான மாடு ஆகியவை மட்டுமே இந்த நோய்த் தொற்றில் இருந்து நம் கறவை மாடுகளை காப்பாற்றும்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.