திருச்சி கிழக்குத் தொகுதி பஞ்சாயத்து – 1, வேட்பாளர் ஜவாஹிருல்லா… ?

0
Business trichy

திருச்சி கிழக்குத் தொகுதி பஞ்சாயத்து – 1

ஜவாஹிருல்லா..?

திருச்சி கிழக்கு தொகுதி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தொகுதியாகும், திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட முக்கிய தொகுதி என்பதால் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யவே போட்டி நடைபெறுவது வழக்கம்.

loan point

இந்த முறையும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கிழக்கு தொகுதிக்கு போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கிழக்குத் தொகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இப்படியாக திமுக வினர் இடையே கிழக்குத் தொகுதியை கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகள் நடந்து வரும் நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான தமுமுக கிழக்குப் தொகுதியை திமுகவிடம் முன்வைத்து பெற விரும்புவதாகவும் மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் கிழக்குத் தொகுதியை திமுக கூட்டணியில் இருந்து பெற தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

nammalvar
web designer

இந்த நிலையில் தமுமுகவுக்கு திருச்சி கிழக்கு தொகுதியை திமுக கூட்டணி ஒதுக்கும் பட்சத்தில் தமுமுகவின் சார்பில்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமுமுக பைலாவை பொருத்தவரை வேட்பாளர்கள் தேர்வு என்பது கட்சியின் முதன்மை தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள், அல்லது மாவட்ட தலைவர்கள் என்ற அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார். திருச்சி கிழக்கு தொகுதியில் பேராசிரியர் ஜவாஹிருல்லா போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் த மு மு க விற்கு திமுக கூட்டணியில் இருந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டுகள் ஒதுக்கப்படவில்லை, அப்படியிருந்தும் தமுமுக, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது, இதனால் தமுமுக முன்வைக்கும் முன்வைக்கக்கூடிய 13 சட்டமன்ற தொகுதிகளில், இருந்து அவர்களுக்கு குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையில், அவர்கள் கோரிய தொகுதியே ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிழக்கு தலைவர் காதர்மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிழக்குத் தொகுதியை திமுகவிடம் இருந்து ஒதுக்க கோருவதாக கூறியிருந்தார். அப்படி ஒருவேளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்க்குகிழக்குத் தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில் சென்ற சட்டமன்றத் தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட்ட எம்.எம் நிஜாம் இந்தமுறை கிழக்கு தொகுதியில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது‌.

மதிமுக கிழக்குத் தொகுதியை கோரும் என்று கூறப்படுகிறது, மதிமுக சார்பில் மருத்துவர் ரோகையா நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் திமுகவிலும் கிழக்கு தொகுதிக்கு போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. .

IAS academy

Leave A Reply

Your email address will not be published.