திருச்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக்கூட்டம்:

0
Business trichy

திருச்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக்கூட்டம்:

வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளதால் மாவட்டத்தில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வட்டாட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று (23.11.2020) நடைபெற்றது.

web designer

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும்  தெரிவித்ததாவது:
வங்கக்கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  உருவாகி உள்ளதால் புயல்
முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்டத்தில் கனமழை, மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால்
மேற்கொள்ள வேண்டிய பணிகள் அனைத்து வட்டாட்சியர்களும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும்  மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான இடங்களை கண்டறிந்து பட்டியல் வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்  ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வருகின்ற 25.11.2020 அன்று தலைமையிடத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது. விடுமுறை எடுக்க கூடாது இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

loan point

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பழனிகுமார், வட்டாட்சியர்கள் திரு.குகன்(கிழக்கு),
திரு.கே.ரமேஷ் (மேற்கு), திருமதி.ஆர்.சித்ரா(இலால்குடி), திரு.எம்.செல்வம் (துறையூர்),
திருமதி.த.மலர் (மண்ணச்சநல்லூர்) மற்றும்  பலர் உடனிருந்தனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.